செய்திகள்
ஆன்டி ராபர்ட்ஸ், பும்ரா

நான் பார்த்ததில் சிறந்த பந்து வீச்சாளர்: பும்ராவுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் புகழாரம்

Published On 2019-08-27 12:55 GMT   |   Update On 2019-08-27 12:55 GMT
இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் ஆக்சனை இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய பும்ரா, 2-வது இன்னிங்சில் 8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

அவரது பந்து வீச்சை கண்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் அசந்து விட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆன்டி ராபர்ட்ஸ், பும்ரா சிறந்த பந்து வீச்சாளர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பும்ரா குறித்து ஆன்டி ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘நான் கிரிக்கெட் போட்டியில் பார்த்ததில் பும்ராவின் ஆக்சன் மிகவும் வலிமையானது. அவரின் பந்து வீச்சு ஆக்சனை புரிந்துகொள்ள  ஆராய வேண்டியுள்ளது. ஆனால், அவர் எங்களது காலக்கட்டத்தில் இருந்திருந்தால், அவரைப் போன்ற ஒருவரை நாங்கள் உருவாக்கியிருப்போம். எங்களது பந்து வீச்சு முறையில் இந்த ஆக்சன் மட்டுமே இல்லாமல் போய்விட்டது.

உண்மையிலேயே பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளரை எங்களால் உருவாக்க முடியாமல் போய்விட்டது. இந்தியாவும் அவரைப் போன்ற ஒருவரை உருவாக்கும் என்று நினைக்கவில்லை. 

என்னுடைய காலக்கட்டத்தில் இந்தியாவில் ஏராளமான ஸ்பின்னர்கள் இருந்தனர். அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். என்றாலும், வெளிநாட்டு மண்ணில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவில் கபில்தேவ் மற்றும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளரை உருவாக்குவார்கள் என்ற நாங்கள் நினைக்கவே இல்லை. நான் பார்த்த வகையில் சிறந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்’’ என்றார்.
Tags:    

Similar News