செய்திகள்
மின் கம்பம் சாய்ந்து கிடக்கும் காட்சி

கிருஷ்ணகிரியில் லாரி மோதி மின்கம்பங்கள் உடைப்பு

Published On 2019-12-10 16:59 GMT   |   Update On 2019-12-10 16:59 GMT
கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை லாரி மோதி மின் கம்பங்கள் இரண்டாக ஒடிந்து கீழே விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலின் முன்பு மின்கம்பம் ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில், சென்னையிலிருந்து கிருஷ்ணகிரியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள பார்சல் நிறுவனத்திற்கு பார்சல் ஏற்றி வந்தலாரி, அந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் அந்த மின்கம்பம் இரண்டாக ஒடிந்து கீழேவிழுந்தது. மேலும் அந்த மின்கம்பத்திலிருந்து மின்வயர்கள் சென்ற அருகில் இருந்த மின்கம்பம் ஒன்றும் ஒடிந்து விழுந்தது. இதனால் மின்வயர்கள் அறுந்து மின்சாரம் தடைப்பட்டது. காலையில் நடந்த இந்த விபத்தால், இன்று கார்த்திகை தீபம் என்பதால் பொதுமக்கள் காலையில் எழுந்து விளக்குள் ஏற்றி வழிபட்டனர்.

அப்போது மின்சாரம் ரத்தானதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் அந்த விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் மின்விபத்து தடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு உடைந்து கிடந்த மின்கம்பங்களில் இருந்து மின்வயர்களை மாற்றி சுமார் 4 மணிநேரம் போராடி ஒருசில இடங்களில் மட்டும் மின் இணைப்பை கொடுத்தனர்.

இன்னும் சில பகுதியில் மின்சப்ளை வராததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனார்கள்.
Tags:    

Similar News