தமிழ்நாடு
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி போடாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

Published On 2021-12-04 05:15 GMT   |   Update On 2021-12-04 05:15 GMT
தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
மதுரை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவிற்குள் நுழைந்ததால் அது பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளவர்கள் கட்டாயம் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதியில் வசிப்போரில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை
கொரோனா தடுப்பூசி
போட்டுக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

கெடு நேரம் முடிந்த பின்பும் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News