செய்திகள்
கோப்புபடம்

கழிவுகள் மூலம் உரம்-துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி

Published On 2021-09-02 13:58 GMT   |   Update On 2021-09-02 13:58 GMT
மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக குப்பை தொட்டிகளில் தரம் பிரித்து வழங்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அவினாசி :

அவினாசி பேரூராட்சி பகுதியில் தினசரி சேகரிக்கும் கழிவுகளை தரம் பிரித்து வழங்க வீடுதோறும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு தினசரி 12 டன் கழிவுகள் சேகரமாகிறது. 60 தள்ளுவண்டிகள், 2 டிராக்டர், 1 ஆட்டோ மூலம் கழிவுகள் அள்ளப்பட்டு வளம் மீட்பு பூங்கா கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வணிக நிறுவனங்கள் அனைத்தும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக குப்பை தொட்டிகளில் தரம் பிரித்து வழங்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசகர் ராஜசேகரன் தலைமையில் அவினாசி பேரூராட்சியில் உரம் தயாரிக்கும் முறை, கழிவுகள் சேகரம் செய்யும் முறை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் உள்ள துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரம் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News