தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி

அடுத்த வாரம் இந்தியா வரும் நார்சோ 5ஜி போன்கள் - இணையத்தில் லீக் ஆன புது தகவல்

Published On 2022-05-14 05:58 GMT   |   Update On 2022-05-14 05:58 GMT
ரியல்மி நிறுவனம் புதிய நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.


ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான டீசர் வெளியிடப்பட்டது. மேலும் நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் மே 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. நார்சோ 50 சீரிசில் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர் வழங்கப்படுகிறது. இது அந்த பிரிவில் சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும். 

டீசரில் புது ஸ்மார்ட்போன் பன்ச்-ஹோல் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. டிமென்சிட்டி 920 பிராசஸர் கொண்டு அறிமுகமான ரியல்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகும். எனினும், இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 990 என்றே தொடங்குகிறது. 

அந்த வகையில், நார்சோ 50 ஸ்மார்ட்போன் விலை இதைவிட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் மற்றும் 5 அடுக்கு கூலிங் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் வெப்பத்தை பெருமளவு குறைக்க வழி செய்யும். இத்துடன் கேமிங் அனுபவமும் இந்த மாடலில் சிறப்பானதாகவே இருக்கும். 

கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம் செய்த நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 800u பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், புதிய நார்சோ 50 சீரிசில் அதிநவீன மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. மேலும் நார்சோ ஸ்மார்ட்போன்களிலேயே இது மிகவும் மெல்லிய மாடல் என ரியல்மி தெரிவித்து உள்ளது. 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி Q5i மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.



ரியல்மி நார்சோ 50 5ஜி / Q5i அம்சங்கள்:

- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 6nm பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 4GB / 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- 13MP பிரைமரி கேமரா, f/2.2, LED ஃபிளாஷ்
- 2MP 4cm மேக்ரோ சென்சார், f/2.4
- 8MP செல்ஃபி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1, 
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 33W பாஸ்ட் சார்ஜிங்
Tags:    

Similar News