ஆன்மிகம்
கள்ளழகர் கோவில்

கள்ளழகர் கோவில் திருக்கல்யாண திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-03-15 08:58 GMT   |   Update On 2021-03-15 08:58 GMT
கள்ளழகர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா. இந்த திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா. இந்த திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இதில் அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாண திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.

பின்னர் 7.30 மணிக்கு சன்னதிக்குள் செல்கிறார். தொடர்ந்து 26-ந் தேதியும், 27-ந் தேதியும் அதே மண்டபத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.50 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் அதே மண்டபத்தில் மிதுன லக்கினத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டி மார்களையும் ஏகாசனத்தில் அமர்ந்து கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க, திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு சுவாமி, 4 பிராட்டி மார்களுடன். சப்பரத்தில் புறப்பாடாகி சன்னதிக்குள் போய் எழுந்தருள்கிறார்.

29-ந் தேதி 5-ம் திருநாள் அன்று மஞ்சள் நீர் சாற்று முறையுடன் திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News