ஆன்மிகம்
கோடம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

ஆடிப்பூரம்: கோடம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்

Published On 2021-08-12 01:48 GMT   |   Update On 2021-08-12 01:48 GMT
கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன், பிரத்யங்கிரா தேவி கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை :

ஆடிப்பூரத்தையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கற்பகம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வளையல் சாற்றுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் நிகழ்ச்சிகள் ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது.

அதேபோல், கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன், பிரத்யங்கிரா தேவி கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. உற்சவர் அம்மன் கருவுற்றிருப்பதாக கருதி பெண் பக்தர்கள் அம்மனுக்கு 1,008 சீமந்த நலுங்கு செய்தனர்.

கொரோனா பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியை பின்பற்றி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை மட்டும் விழா நடந்தது. தொடர்ந்து இரவு வரை பக்தர்களுக்கு சீமந்த சாப்பாடு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடிப்பூர விழாவில் கலந்து கொண்டு நலுங்கு செய்து சாப்பிட்டு சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் பெண் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு நலுங்கு செய்தனர். பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக பொம்மை வழங்கப்பட்டது.
Tags:    

Similar News