வழிபாடு
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜை தொடங்கியது

Published On 2022-01-25 09:08 GMT   |   Update On 2022-01-25 09:08 GMT
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜை தொடங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருகிற 27-ந்தேதி(வியாழக்கிழமை) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு நாடியம்மன் உற்சவர் சிலை கோட்டை சிவன் கோவிலில் இருந்து பல்லக்கில் நேற்று காலை 10 மணிக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு வி.என். எஸ். எஸ்டேட் சார்பில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. நாளை(புதன்கிழமை) காலையில் நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலை ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

குடமுழுக்கு விழா

27-ந்தேதி(வியாழக்கிழமை) காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆறாம் கால யாகசாலை பூஜை தொடங்கி, காலை 9.15 மணிக்கு விமான குடமுழுக்கும், காலை 9.30 மணிக்கு மூலவர் நாடியம்மனுக்கு மகா குடமுழுக்கும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News