செய்திகள்
இ-பதிவு

இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு

Published On 2021-05-18 02:54 GMT   |   Update On 2021-05-18 02:54 GMT
இ-பதிவு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால் அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் அவசர பயணத்துக்காக இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இ-பதிவு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால் அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. தற்போது உரிய ஆவணங்களுடன் இ-பதிவு முறையில் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News