ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் 23-ந்தேதி ஆவணி திருவிழா

Published On 2019-08-21 04:50 GMT   |   Update On 2019-08-21 04:50 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி, வைகாசி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், தொடர்ந்து நடை திறந்து திருவிளக்கேற்றுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை, அதிகாலை 6 மணிக்கு கொடி பட்டம் தயாரித்தல், தொடர்ந்து கொடியேற்றம் போன்றவை நடைபெறும். கொடியை பால ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார்.

பின்னர் மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம், இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்றவை நடைபெறும். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனி, உகப்படிப்பு, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

24-ந் தேதி இரவு பரங்கி நாற்காலியிலும், 25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி பூஞ்சப்பர வாகனத்திலும், 27-ந் தேதி மயில் வாகனத்திலும், 28-ந் தேதி கற்பக வாகனத்திலும், 29-ந் தேதி சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் அய்யா தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 30-ந் தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. அதை முன்னிட்டு வைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், 31-ந் தேதி இரவு அய்யா அனுமன் வாகனத்திலும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி இந்திர வாகனத்திலும் பவனிவருதலும் நடைபெறும்.

விழாவின் இறுதி நாளான 2-ந் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
Tags:    

Similar News