குழந்தை பராமரிப்பு
குழந்தைகளை அச்சுறுத்தும் புற்றுநோய்

குழந்தைகளை அச்சுறுத்தும் புற்றுநோய்

Published On 2022-03-18 08:27 GMT   |   Update On 2022-03-18 08:27 GMT
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 19 வயதுக்குட்பட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் வெவ்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
புற்றுநோய் பெரியவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உலகெங்கிலும் தினமும் ஏராளமான குழந்தைகள் இந்த கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 19 வயதுக்குட்பட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் வெவ்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

எச்.ஐ.வி, எப்ஸ்டீன்-பார் வைரஸ் மற்றும் மலேரியா போன்ற நாள்பட்ட நோய்த்தொற்றுகள் குழந்தை பருவ புற்றுநோய்க்கு வித்திடக்கூடியவை. இதேபோன்ற பிற நோய்த்தொற்றுகளும் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

எனவே, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் நாள்பட்ட நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதும், உரிய சமயத்தில் தடுப்பூசி போடுவதும் முக்கியமானது. ஆரம்பத்திலேயே புற்றுநோய்க்கான அறிகுறிகளை கவனத்தில் கொண்டு நோய் தடுப்பு சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் திறம்பட எதிர்த்து போராட முடியும்.

அதிக வருமானம் கொண்ட நாடுகளில், புற்றுநோய் சிகிச்சைக்கு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு குழந்தை பருவ புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ரத்த புற்றுநோயாகும். இது குழந்தைகளை பொறுத்தவரை பொதுவான வகை புற்று நோயாக அறியப்படுகிறது.

ரத்த அணுக்கள், எலும்பு மஜ்ஜை, ரத்தம் மற்றும் நிணநீர் போன்றவை பாதிப் படைவது ரத்த புற்றுநோய்க்கு வித்திடக்கூடும். புற்றுநோய்களுள் லுகேமியா என்பது பிறந்த குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள இளம் வயதினரை பாதிக்கும் பொதுவான வகை ரத்த புற்றுநோயாகும். ரத்தப் புற்றுநோயை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்பது பலருக்கு இன்னும் தெரியாது. ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
Tags:    

Similar News