செய்திகள்
முக ஸ்டாலின்

பெண் போலீசார் மீது கருணை காட்டிய மு.க.ஸ்டாலின்

Published On 2021-06-14 04:54 GMT   |   Update On 2021-06-14 06:07 GMT
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசார் சில சமயம் பலமணி நேரம் சாலைகளில் கால்கடுக்க நிற்கவேண்டியது வரும்.
சென்னை:

முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, சாலைகளில் 50 அடிக்கு ஒருவர் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதுபோன்ற பாதுகாப்பு பணியில் பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசார் சில சமயம் பலமணி நேரம் சாலைகளில் கால்கடுக்க நிற்கவேண்டியது வரும்.

அது போன்ற சமயங்களில் இயற்கை உபாதையால் பெண் போலீசார் அவதிப்படும் நிலை இருந்தது.

இந்தநிலையில் இது போன்ற இன்னல்களில் இருந்து விடுவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணையோடு பெண் போலீசாருக்கு உதவி புரிந்துள்ளார். நான் செல்லும் சாலைகளில் பெண் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம், என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

முதல்-அமைச்சரின் இந்த அறிவுறுத்தல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் பெண் போலீசார், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணிக்கு சாலைகளில் கால்கடுக்க நின்று அவதிப்பட வேண்டியதில்லை.
Tags:    

Similar News