உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட விஷ்வா, ராஜா செல்வம்.

தி.மு.க. பெண் கவுன்சிலர் தந்தை கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

Published On 2022-04-17 07:39 GMT   |   Update On 2022-04-17 07:39 GMT
கும்பகோணம் மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தந்தை கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலூக்கா ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் அப்துல் ரஜாக் (வயது 63). இவர் ராஜகிரியில் கைலி கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி நூர்ஜகான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

 இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஹதீஜா பீபி கும்பகோணம் மாநகராட்சியில் 3-வது வார்டு தி.மு.க.கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இரவு அப்துல் ரஜாக் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் முகமது ஆரிப் அய்யம்-பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பேரில் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  கொலையாளிகளை விரைந்து பிடிப்பதற்காக 7 தனிப்படைகள் அமைக்-கப்பட்டு போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்-கொண்டனர்.
 
இந்நிலையில் அகரமாங்குடி ஆற்றங்கரைப் பகுதியில் சந்தேகத்திற்-கிடமான வகையில் சிலர் பதுங்கி இருப்பதாக தனிப்படை மற்றும் தனிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்தவர்களை விரட்டி பிடித்-தனர். விசாரணையில் அவர்கள் அய்யம்பேட்டை பாரதிதாசன் தெருவை சேர்ந்த விஜயேந்திரன் மகன் விஷ்வா (வயது 19), சூலமங்கலம் ராஜப்பா மகன் பாட்சா என்கிற ராஜ செல்வம் (வயது29) மேலும் தராசுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்-கொண்டனர். போலீஸ் தரப்பில் இது குறித்து கூறியதாவது, அப்துல் ரஜாக் தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்ட மூன்று பேரும் அவரது வீட்டில் திருட திட்டம் தீட்டியுள்ளனர். 

சம்பவத்தன்று இரவு அவர் வீட்டுக்கு சென்ற 3 பேரும் திருட முயன்ற போது அப்துல் ரஜாக் கூச்சலிட முயன்றதாகவும், இதையடுத்து அவரை இறுக்கி பிடித்த போது, அவர் மூச்சுத்-திணறி இறந்து விட்டதாகவும், இதையடுத்து அவர் வீட்டில் இருந்த ரூ.24 ஆயிரத்து 500 ரொக்கம், 5 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளை-யடித்து விட்டு சென்றதாகவும் கூறினர். 

இதையடுத்து அவர்களி-டமிருந்து ரொக்க பணம், நகை, திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஸ்வா, பாட்சா என்கிற ராஜா செல்வம், மேலும் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Tags:    

Similar News