லைஃப்ஸ்டைல்
ப்ரசரித்த பதோத்தனாசனம்

தலைசுற்றல், தலைவலியை குணமாக்கும் ஆசனம்

Published On 2020-05-26 07:49 GMT   |   Update On 2020-05-26 07:49 GMT
ப்ரசரித்த பதோத்தனாசனம் செய்வதால் மூளைப்பகுதிக்கு ரத்தஓட்டம் அதிகரித்து தலைவலி, தலைசுற்றல் நீங்குகிறது. மூளை புத்துணர்ச்சி பெற்று தலைவலிக்கு காரணமான மன அழுத்தம், மனப்பதற்றம் நீங்குகிறது.
செய்முறை

விரிப்பின் மேல் இரண்டு கால்களுக்கும் இடையில் 4 அடி இடைவெளியில் நன்றாக கால்களை அகட்டி, அதேசமயம் நன்றாக ஊன்றி நிற்க வேண்டும். மார்பிலிருந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு, கைகள் இரண்டையும் தோள்பட்டை அகலத்துக்கு விரித்த நிலையில் உடலை முன்னோக்கி வளைத்து கீழே குனிய வேண்டும்.

உடலை நன்றாக வளைத்து, முழங்கைகளை மடித்தவாறு, இரண்டு கைகளையும் இரண்டு கால்களின் பாதங்களுக்கு நேராக கொண்டு வர வேண்டும். தலை தரையில் ஊன்றிய நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். முதுகுத்தண்டு நன்றாக வளையும் வகையில் இடுப்பு தூக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மெதுவாக தலையை உயர்த்தி பழைய நிலைக்கு திரும்புங்கள்.

நன்மைகள்

கால்களின் உட்பகுதி, வெளிப்பகுதி தசைகள் மற்றும் கணுக்கால் தசைகள் நன்றாக வளைந்து கொடுப்பதால் வலுவடைகின்றன. மூளைப்பகுதிக்கு ரத்தஓட்டம் அதிகரிப்பதால் தலைவலி, தலைசுற்றல் நீங்குகிறது. முதுகுத்தண்டு, இடுப்பு எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகின்றன. மூளை புத்துணர்ச்சி பெற்று தலைவலிக்கு காரணமான மன அழுத்தம், மனப்பதற்றம் நீங்குகிறது. தோள்கள் வலுவடைகின்றன.
Tags:    

Similar News