செய்திகள்
கோப்புபடம்

திருவையாறு பகுதியில் 31 பேருக்கு கொரோனா தொற்று - கிரிமி நாசினி தெளித்து தூய்மைப்பணி

Published On 2021-06-09 10:31 GMT   |   Update On 2021-06-09 10:31 GMT
திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 12 ஊர்களில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 31 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 12 ஊர்களில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 31 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தகவல் அறிந்த தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், கணேசன், நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, சந்துரு, மஞ்சு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று கிருமி நாசினி தெளித்தனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடுபத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளவும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினர்.

மேலும் மருவூர் ஊராட்சியில் ஒரே தெருவில் 3 பேருக்குமேல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தெருவை அதிகாரிகள் பார்வையிட்டு கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டு தடுப்பு வைத்து அடைத்தனர்.

தொடர்ந்து தாசில்தார் நெடுஞ்செழியன் வடுகக்குடி கிராமத்தில் கொரோனா பரிசோதனை நடைபெறும் முகாமினை பார்வையிட்டு அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ள அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News