ஆன்மிகம்
வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கோவில் பூஜைகளில் பக்தர்களுக்கு தடை

Published On 2020-08-21 06:02 GMT   |   Update On 2020-08-21 06:02 GMT
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கோவில் சார்பாக எந்த விதமான சிலைகளையும் பொது இடத்தில் வைக்கக்கூடாது. கோவில்களில் பூஜை, அர்ச்சனைகள் பொதுமக்கள், பக்தர்கள் இன்றி நடைபெற வேண்டும்.
இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கோவில் சார்பாக எந்த விதமான சிலைகளையும் பொதுஇடத்தில் வைக்கக்கூடாது. பொதுமக்கள் பார்வையை ஈர்க்கும் வகையிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் எவ்வித புதிய சிலைகளையும் வைக்க கூடாது.

கோவில் சார்பாக ஊர்வலங்கள் நடத்தக்கூடாது. மதம் சம்பந்தப்பட்ட பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தவும், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும், மக்கள் கூடுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் பூஜை, அர்ச்சனைகள் பொதுமக்கள், பக்தர்கள் இன்றி நடைபெற வேண்டும். சிறப்பு பூஜைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குருக்கள் கலந்து கொள்ளும் போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

உபயதாரர் அல்லது நன்கொடைதாரர் பூஜையின் போது அதற்கான கட்டணத்தை அவர்களிடம் இருந்து பெற்று அவரின் பேரில் அர்ச்சனை செய்யலாம். அப்போது உபயதாரர் அல்லது நன்கொடையாளர் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News