ஆன்மிகம்
அம்மாப்பேட்டை உத்திராபதியார் கோவில் குடமுழுக்கு

அம்மாப்பேட்டை உத்திராபதியார் கோவில் குடமுழுக்கு

Published On 2021-09-04 05:28 GMT   |   Update On 2021-09-04 05:28 GMT
அம்மாப்பேட்டை உத்திராபதியார் கோவில் கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனர்.
அம்மாப்பேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் உள்ள உத்திராபதியார் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மஹா பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு செய்து கோவில் கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

பின்னர் கோவிலில் உள்ள மூலவர் உத்திராபதியாருக்கு மகா அபிஷேக, ஆராதனைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது. மாலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உத்திராபதியார் வீதி உலா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனர்.
Tags:    

Similar News