லைஃப்ஸ்டைல்
ஆஸ்துமா நோய் வருவதற்கு இவை தான் காரணம்

ஆஸ்துமா நோய் வருவதற்கு இவை தான் காரணம்

Published On 2021-08-19 03:25 GMT   |   Update On 2021-08-19 09:12 GMT
ஒவ்வாமை, ஒவ்வாமை ஊக்குவிப்பான்கள் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.எந்தெந்த காரணங்களால் தனக்கு ஆஸ்துமா தூண்டப்படும் என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு நோயாளி அவற்றைத் தவிர்க்க முடியும்.
நுரையீரலுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்லும் நாளங்களை வீங்கவும் சுருங்கவும் செய்வதன் மூலம், இழுப்பு, மூச்சுத்தடை, மார்பு இறுக்கம், இருமல்

போன்றவற்றை ஆஸ்துமா நோய் ஏற்படுத்தும். மூச்சு செல்கிற பாதையில் ஏற்படுகிற அழற்சியே இந்த நோயை உண்டாக்குகிறது. ஒருவருக்கு இந்த நோய்

வந்தால், மூச்சு செல்லும் பாதையானது வீக்கம் அடைந்து, அந்தப் பகுதியில் உள்ள தசைகள் இறுகுகின்றன. இதனால் அங்கு பிராணவாயு செல்வது குறைகிறது.

ஒவ்வாமை, ஒவ்வாமை ஊக்குவிப்பான்கள் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.

வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளின் முடி, தூசி, துகள்கள், வலி நிவாரண மாத்திரைகள், குளிர்ந்த காற்று, உணவு, உடற்பயிற்சி,

பூ மகரந்தம், சளி, மன அழுத்தம், புகையிலையை பயன்படுத்துதல் போன்றவை இதற்கு காரணங்கள். ஒரு சிலருக்கு பரம்பரையாகவே ஒவ்வாமை இருக்கும்.

ஒவ்வாமையும், தோல் நோயும் சேர்ந்தும் வரலாம். சிலருக்கு நோயின் வேகம் அதிகரிக்கும். சிறிது காலம் நோய் இல்லாமல் இருக்கும். இருமல் வரும்போது

சளி வரலாம், வராமலும் இருக்கலாம். மூச்சுத்தடை வரலாம். உடற்பயிற்சி செய்தால், மூச்சுத்தடை அதிகரிக்கலாம். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு முகம், உதடுகள்

நீலமானாலோ, உணர்ச்சித்திறன் குறைந்தாலோ, மயக்கம் வந்தாலோ, நாடித் துடிப்பு மிக அதிகமாக இருந்தாலோ, மிகவும் பரபரப்புடன் காணப்பட்டாலோ, உடல்

அதிகமாக வியர்த்தாலோ, மூச்சு மாறுபட்டாலோ, மூச்சு இடையில் நின்றாலோ உடனே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.

எந்தெந்த காரணங்களால் தனக்கு ஆஸ்துமா தூண்டப்படும் என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு நோயாளி அவற்றைத் தவிர்க்க முடியும். பீக் புளோ மீட்டர் எனும்

கருவி உள்ளது. இதன் மூலம் நாம் எவ்வளவு மூச்சுக் காற்றை வெளியிட முடியும் என்பது தெரியும். இதில் 50 முதல் 80 வரை நம்மால் செய்ய முடிந்தால் ஒரு

மத்தியமான நிலையில் ஆஸ்துமா உள்ளது என்று அர்த்தம். 50-க்கு கீழ் இருந்தால் அதிகம் என்று அர்த்தம். இது ஒரு நாள்பட்ட நோய்.

உடற்பயிற்சி செய்ய இயலாமை, இரவில் தூங்க முடியாமல் போவது, நுரையீரல் பாதிக்கப்படுவது, தினமும் இருமிக்கொண்டே இருப்பது, நெஞ்சு வலி

போன்றவை இருக்கும்.

மனச்சோகம், மனக்குழப்பம் போன்றவற்றைத் தவிர்ப்பது இன்றியமையாததாக கருதப்படுகிறது. தூதுவளை கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி

ஆகியவற்றை சேர்த்து கசாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சு திணறல், ஆஸ்துமா, குளிர் காய்ச்சல் போன்றவை குறையும் என சித்த

மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.
Tags:    

Similar News