செய்திகள்
எஸ்பிஐ

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நாளை கடன் மேளா

Published On 2019-10-03 09:37 GMT   |   Update On 2019-10-03 09:37 GMT
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் நாளை கடன் மேளா நடைபெறுகிறது. இதில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பங்கு கொள்கின்றனர்.
சென்னை:

பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் மேளா நடத்தப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

அதன்படி முதற்கட்டமாக 250 மாவட்டங்களை தேர்வு செய்து கடன்மேளா நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருப்பூர், கோவை, ஊட்டி, திருவள்ளூர், கடலூர், வேலூர், கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, விருதுநகர் உள்பட 15 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் கடன் மேளாவில் கலந்து கொள்கின்றன.

திருமண மண்டபங்களை ஏற்பாடு செய்து அதில் அனைத்து வங்கிகளும் ஸ்டால்கள் அமைத்திருக்கும். வாடிக்கையாளர்கள் அங்கு சென்று விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அதை அதிகாரிகள் ஆய்வுசெய்த பிறகு லோன் வழங்கப்படும்.

இந்த முகாமில் கடன் மட்டுமின்றி வங்கி சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நிலுவையில் உள்ள கடன்களை ஒரே தவணையில் செலுத்தி கடனை முடித்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த முகாம் நாளை (வெள்ளி) தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெறும்.
Tags:    

Similar News