லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் சந்திக்கும் பேன் தொல்லை...

குழந்தைகள் சந்திக்கும் பேன் தொல்லை...

Published On 2019-12-03 05:34 GMT   |   Update On 2019-12-03 05:34 GMT
சுத்தமின்மை அல்லது மற்றவர்களால், உங்கள் குழந்தை பேன் தொல்லைக்கு ஆளாகியிருந்தால், அதை சரி செய்யும் வழிகளை பற்றி, அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் வளர்ந்து, அவர் வயது நண்பர்களுடன் விளையாடுகையில் எத்தனையோ விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். விளையாட்டு ஆர்வத்தில் தான் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே மறந்துவிடுகின்றனர். பொதுவாகவே தலையில் அதிகம் அழுக்கு தோன்றினால், அது பேன்கள் உருவாவதற்கு வழிவகுத்துவிடும். மேலும் இந்த பேன்கள் மற்றவர்களிடமிருந்து பரவும் தன்மை கொண்டவை. எனவே, சுத்தமின்மை அல்லது மற்றவர்களால், உங்கள் குழந்தை பேன் தொல்லைக்கு ஆளாகியிருந்தால், அதை சரி செய்யும் வழிகளை பற்றி, அறிந்து கொள்ளலாம்.

பேன்கள் தலைமுடியின் நிறத்தில் இருக்கும்; அதாவது வெள்ளை, ப்ரௌன், கருப்பு நிறங்களில் இருக்கும்; இவற்றால் பறக்க இயலாது, நடக்கவும் ஓடவும் செய்யும். 4-5 மணி நேரத்திற்கு ஒரு முறை இரத்தத்தை உறிஞ்சும். இரத்தமே இவற்றின் உணவு. இவற்றின் கடி அரிப்பை ஏற்படுத்தி, எரிச்சலை உண்டாக்கும். ஒரு பேன் 30 நாளைக்குள் 180 முட்டைகளை இடுமாம். எனில் எண்ணிப்பாருங்கள் உங்கள் குழந்தையின் தலையில் எத்தனை ஆயிரம் பேன்கள் இருக்கும் என்று..!

அறிகுறிகள்..

குழந்தைகள் எந்நேரமும் தலையை அரித்துக் கொண்டே இருந்தால், காது மற்றும் கழுத்தின் பின்புறம் அரித்துக் கொண்டிருந்தால் பேன்கள் உள்ளன என்று அறியலாம். குழந்தையின் தலையில் பேன் இருந்தால், கட்டாயம் குடும்பத்தாருக்கும் பரவும்.. ஆகையால் விரைவில் கண்டறிந்து, அதை போக்கும் மார்க்கத்தை யோசியுங்கள்..

எப்படி போக்குவது?

இதை போக்குவது அவ்வளவு கடினமல்ல. நீங்கள் செய்ய வேண்டியது:

* பேன்களை நீக்கும் ஷாம்பூவை தலைக்கு பயன்படுத்துங்கள். இது ஓரளவுக்கே பலனளிக்கும்; முற்றிலுமல்ல.

* பேன்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட, நேரம் செலவிட்டு பேன் பார்ப்பது தான். இம்முறையில் முற்றிய மற்றும் பேன் முட்டைகள் என அனைத்தையும் அழித்து விடலாம்.

* முடியை நீக்கி, மொட்டையடிப்பது அல்லது ஓட்ட வெட்டிவிடுவது.

* பேன்களை நீக்கும் பிரத்யேக சீப்புகளை பயன்படுத்தி, அவற்றை சீவி நீக்க முயற்சிக்கலாம்.

- வேப்ப இலைகளை வேக வைத்து, அதனை குழந்தையின் தலைக்கு பயன்படுத்தினால், பேன் மற்றும் பொடுகு இவற்றை நீக்கலாம்.

மிக முக்கியமானது, குழந்தைகளுக்கு சுய சுத்தம் மற்றும் ஒழுக்கத்தை கற்பிப்பது. குழந்தைகளிடம் சீப்புகளை, ஆடைகளை மற்றவருடன் பகிரக் கூடாது; சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பழக்கங்களை வழக்கமாக்குங்கள்.
Tags:    

Similar News