ஆன்மிகம்
வேதாரண்யேஸ்வரர் கோவில்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2021-07-19 05:51 GMT   |   Update On 2021-07-19 05:51 GMT
பல்வேறு சிறப்பு பெற்ற வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆடி மாத முதல் தேதி அயனதித்தியை முன்னிட்டு நேற்று காலை கோவில் உள்ளே உள்ள மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது.

பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து பூஜை செய்து தியாகராஜசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால்அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News