லைஃப்ஸ்டைல்
தர்பூசணி அல்வா

நாவில் எச்சில் ஊறச் செய்யும் தர்பூசணி அல்வா

Published On 2021-03-17 10:08 GMT   |   Update On 2021-03-17 10:08 GMT
கோடைக்கு இதமாக தர்பூசணி பழத்தில் விதவிதமான ரெசிபிகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தர்பூசணியில் அல்வா செய்யும் விதம் குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

தர்பூசணி பழம் - 1  
வெல்லம் - அரை கிலோ
தேங்காய் பால் - கால் கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 5  
பாதாம் - 10
நெய் - சிறிதளவு

செய்முறை:

தர்பூசணி பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக்கிக்கொள்ளவும்.

பாதாம், முந்திரியை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

பாகு பதத்துக்கு வந்ததும் தர்பூசணி கூழ், தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.

அவ்வப்போது சிறிதளவு நெய் ஊற்றி கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் முந்திரி பருப்பு, பாதாம், ஏலக்காய் தூள் தூவி இறக்கவும்.

பின்னர் ஆறியதும் துண்டுகளாக நறுக்கி அல்வாவை சுவைக்கலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News