செய்திகள்
ஆரோன் பிஞ்ச்

2023 உலக கோப்பையில் விளையாடுவதே முக்கிய குறிக்கோள்: ஆரோன் பிஞ்ச்

Published On 2020-01-12 11:39 GMT   |   Update On 2020-01-12 11:39 GMT
ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் பிஞ்ச், 2023 உலக கோப்பையில் விளையாடுவதுதான் முக்கிய குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். டெஸ்ட் போட்டியில் சொதப்பியதால் அணியில் கிடைக்கவில்லை.

33 வயதாகும் பிஞ்ச், 2023 உலக கோப்பையில் விளையாடுவதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘2023 உலக கோப்பையில் விளையாட விரும்புகிறேன். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தற்போது எனக்கு 33 வயதாகிறது. எனது ஆட்டம் எப்போதும் போல் சிறந்த இடத்தில் இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய திட்டவட்டமான குறிக்கோள் அதுவாகும். பார்ம் மற்றும் உடற்தகுதி குறையும்போது, ஆசை அதைவிட ஒருபோதும் குறைந்து காணப்படாது’’ என்றார்.
Tags:    

Similar News