செய்திகள்
மருத்துவ படிப்பு

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 100 மாணவர்கள் சேர்க்கை- மத்திய சுகாதாரத்துறை கடிதம்

Published On 2021-07-29 02:35 GMT   |   Update On 2021-07-29 02:35 GMT
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு முதல்கட்டமாக கணிசமான தொகையை வழங்குவதாக ஜப்பான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்புவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்த மருத்துவமனை கட்டுவதற்காக முதல்கட்டமாக கணிசமான தொகையை வழங்குவதாக ஜப்பான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தற்போது அந்த மருத்துவமனையின் திட்ட அதிகாரிகள் நியமன பணிகள் நடக்கின்றன.

அடுத்ததாக 50-ல் இருந்து 100 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை இந்த கல்வி ஆண்டில் (2021-22) தொடங்கப்படும். முன்னதாக, எம்.பி.பி.எஸ். கல்வி கற்றல்-கற்பித்தல் பணிகளை செய்வதற்கு உரிய தற்காலிக இடவசதி, வகுப்பறைகள், விடுதி, ஆய்வகம், அலுவலகத்திற்கு தேவையான இடங்கள் என கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

இந்த வசதிகளை செய்து கொடுத்தால் வகுப்புகளை நடத்துவது, ஆய்வகம் உள்ளிட்ட செலவுகள் அனைத்தையும் மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். எனவே உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News