ஆன்மிகம்
வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா தொடங்கியது

வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா தொடங்கியது

Published On 2021-02-18 04:27 GMT   |   Update On 2021-02-18 04:27 GMT
வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவை வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதான அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்து, கொடி கம்பத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர்.
வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி முதல் நாளான நேற்று காலை வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதான அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்து, கொடி கம்பத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடி மரத்துக்கும், கொடிக்கும் கற்பூர ஆரத்தி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக கொடிமரம் பல வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பிரம்மோற்சவ விழாவில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழா வருகிற 25-ந்தேதி நிறைவடைகிறது.
Tags:    

Similar News