செய்திகள்
கோவை பெரிய கடை வீதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடக்கும் காட்சி.

கோவையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது

Published On 2021-09-04 07:16 GMT   |   Update On 2021-09-04 09:04 GMT
கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மதுக்கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கக்கூடாது என மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை:

கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, அவினாசி சாலையில் ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள் , காளப்பட்டி சாலை (நேரு நகர்), டி.பி.சாலை, காந்திபுரம் 1 முதல் 11 வரையிலான தெருக்கள், சலீவன் வீதி ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டது.

கிராஸ்கட், ஒப்பணக்கார வீதி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அதிகளவில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்களும் மூடப்பட்டுள்ளன.

கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் பொது போக்குவரத்து தொடர்ந்து இயங்கி வருகிறது.



இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள டீக்கடைகள் மற்றும் ஓட்டல்கள் கூடுதல் நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பு காலை 8 மணி முதல் செயல்பட்டு வந்த ஓட்டல்கள், தேநீர்க்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க கூடுதல் நேரம் அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மதுக்கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கக்கூடாது என மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News