தொழில்நுட்பம்
ஜிமெயில் லோகோ

ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி?

Published On 2019-07-04 09:24 GMT   |   Update On 2019-07-04 09:24 GMT
கூகுளின் ஜிமெயில் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.



அலுவல் ரீதியில் மின்னஞ்சல்களை அனுப்பும் போது சில சமயங்களில் அவற்றை அனுப்ப சரியான நேரத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். சில சமயங்களில் பின்னர் அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மறந்து, தாமதமாக மின்னஞ்சல் அனுப்புவோரும் உண்டு. அவ்வாறானவர்கலுக்காக ஜிமெயிலில் ஷெட்யூல் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.

கூகுள் ஜிமெயில் சேவையின் 15வது ஆண்டு விழாவை முன்னிட்டு கூகுள் மின்னஞ்சல் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வதுடன் மூன்று புதிய வசதிகளை வழங்கியுள்ளது. ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.



முதலில் வெப் பிரவுசரில் mail.google.com வலைதளம் சென்று உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் பதிவிட வேண்டும்.

ஜிமெயிலில் சைன்-இன் செய்ததும் 'Compose' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது திரையின் மேல்புறம் இடதுபக்கம் காணப்படும். மின்னஞ்சலை டைப் செய்து அனுப்ப வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்.

அடுத்து மின்னஞ்சலை அனுப்புவதற்கான பட்டனிற்கு பதில் அதன் அருகில் இருக்கும் கீழ்புற அம்பு குறியை க்ளிக் செய்ய வேண்டும். இனி அனுப்ப வேண்டிய நேரத்திற்கு ஷெட்யூல் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்ததும் புதிய ஆப்ஷன் திறக்கும். அதில் மின்னஞ்சல்களை அனுப்ப மூன்று ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கும். தேர்வு செய்த ஆப்ஷன்களில் நீங்கள் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரம் இடம்பெறவில்லை எனில், 'Pick date & time' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி காலெண்டரில் நீங்கள் அனுப்ப வேண்டிய விவரங்களை தேர்வு செய்ய வேண்டும். மின்னஞ்சலை கம்போஸ் செய்யும் போது அதிகபட்சம் பத்து நாட்களுக்குள் ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

மின்னஞ்சல் ஷெட்யூல் செய்யப்பட்டதும் அது மின்னஞ்சலின் இடதுபுறம் இருக்கும் 'scheduled' பகுதியில் இருக்கும். இங்கு ஷெட்யூல் செய்யப்பட்ட மின்னஞ்சல்களை ரத்து செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மின்னஞ்சல் டிராஃப்ட்ஸ் பகுதியில் திறக்கும்.
Tags:    

Similar News