செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் திறக்கப்பட்ட புதிய வழித்தட பாதை

சென்னை விமான நிலையத்தில் 2,500 சதுர மீட்டரில் பயணிகள் புதிய வழித்தட பாதை திறப்பு

Published On 2021-03-06 03:27 GMT   |   Update On 2021-03-06 03:27 GMT
புதிய வழித்தடபாதை, வருகை பயணிகள் சிரமமின்றி விமான முனையத்தை விட்டு வெளியேறவும், புறப்பாடு பயணிகள் விமானங்களுக்கு விரைவாக செல்லவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விரிவாக்க அபிவிருத்தி பணிகள் ரூ.2,500 கோடியில் நடந்து வருகிறது. உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே செல்ல 2 பாதைகள் இருந்தன. இதை ஒரே வழித்தட பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது.

இதற்காக 19-வது நடைமேடை அருகே 2,500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய வழித்தட பாதை அமைக்கப்பட்டது. இந்த வழித்தடம், உள்நாட்டு விமான வருகை, புறப்பாடு பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பயணிகள் வருகை பகுதிக்கு விமான நடைமேடையில் இருந்து சென்றுவிடலாம். திறந்தவெளி நடைமேடையில் இருந்து பஸ்களில் இருந்து புதிய வழித்தட பாதைக்கு வந்து நடைமேடை வழியாக எளிதாக செல்ல கூடிய வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய வழித்தடபாதை, வருகை பயணிகள் சிரமமின்றி விமான முனையத்தை விட்டு வெளியேறவும், புறப்பாடு பயணிகள் விமானங்களுக்கு விரைவாக செல்லவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலைய புதிய வழித்தட பாதையை பயணிகளுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு சிறப்பு இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் திறந்து வைத்தார். இதில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி, விமான நிலைய இயக்குனர் சுனில் தத் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News