தொழில்நுட்பச் செய்திகள்
ஸ்மார்ட்போன்கள்

இன்று முதல் இந்தியாவில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்சுகளின் விலை குறைய வாய்ப்பு- ஆனால்..

Published On 2022-04-01 08:09 GMT   |   Update On 2022-04-01 08:09 GMT
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பட்ஜெட்டின் போது மின்னணு பொருட்கள் மீதான சுங்க வரியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையில் மின்னணு பொருட்கள் மீதான சுங்க வரியில் பல மாற்றங்களை அறிவித்தது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், ஹெட்ஃபோன்கள், இயர்பட்ஸ் ஆகியவற்றின் விலைகளில் இன்று முதல் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, மொபைல் போன் சார்ஜர்களின் டிரான்ஸ்பார்மர் பாகங்கள், மொபைல் கேமரா லென்ஸ்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான சுங்க வரி 5 முதல் 12.5 சதவிதமாக அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் செலவு குறையும் என்பதால் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளர்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால்  ஸ்மார்ட்வாட்சுகள், ஃபிட்னஸ் பேண்டுகள் போன்ற சாதனங்களை வாங்க விரும்புபவர்களுக்கும் விலை குறைய வாய்ப்புள்ளது.

இயர்பட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதனால் வயர்லெஸ் இயர்பட்கள், நெக்பேண்ட் ஹெட்ஃபோன்கள் போன்றவற்றின் விலை உயரும் என கூறப்படுகிறது.

அதேபோன்று ப்ரீமியம் ஹெட்ஃபோன்களின் நேரடி இறக்குமதிக்கு 20 சதவீதம் கூடுதல் கட்டணத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் ஹெட்போன்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

பட்ஜெட்டில், கம்ப்ரசர்கள், குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படும் பாகங்கள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று முதல் ஏசி விலையும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News