செய்திகள்
கோப்பு படம்

புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2020-12-05 10:17 GMT   |   Update On 2020-12-05 10:19 GMT
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார்.
சென்னை:

வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நிவர் புயல் கரையை கடந்துள்ளபோதும் தற்போது உருவான புரெவி புயல் காரணமாக தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

இதற்கிடையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், புயல் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள் நியமனம் செய்துள்ளார்.

அதன்படி,

* சென்னை மாவட்டம் - அமைச்சர் ஜெயகுமார், மாபா.பாண்டியராஜன் நியமனம்

* கடலூர் மாவட்டம் - அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத்

* திருவாரூர் - அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ்

* நாகை - எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர்

* செங்கல்பட்டு , காஞ்சிபுரம் - செங்கோட்டையன், பெஞ்சமின்

ஆகியோர் புயர் நிவாரண பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News