செய்திகள்
தூத்துக்குடியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தர்ணா போராட்டம் நடந்த போது எடுத்த படம்.

தூத்துக்குடியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா போராட்டம்

Published On 2021-01-10 13:12 GMT   |   Update On 2021-01-10 13:12 GMT
தூத்துக்குடியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தர்ணா போராட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார். முடிவில் மாவட்ட பொருளாளர் பாப்ஹையஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News