செய்திகள்
தடுப்பூசி மருந்துகளை வழங்கிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

மாலத்தீவுக்கு மேலும் ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கியது இந்தியா

Published On 2021-02-20 16:55 GMT   |   Update On 2021-02-20 16:55 GMT
மாலத்தீவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலத்தீவு, நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.

இந்நிலையில், மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மாலத்தீவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை இன்று வழங்கினார். இதனை மாலத்தீவு சுகாதாரத்துறை மந்திரி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

மேலும் இந்த சுற்றுப்பயணத்தின்போது இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
Tags:    

Similar News