செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 563 கன அடியாக சரிவு

Published On 2021-08-26 04:02 GMT   |   Update On 2021-08-26 04:02 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடக அணைகளில் தொடர்ந்து மழை பெய்ததால் உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீருடன், மழை நீரும் சேர்ந்து வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 24-ந் தேதி 11 ஆயிரத்து 620 கன அடியாக வந்தது.

இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிய தொடங்கி உள்ளது. நேற்று 8 ஆயிரத்து 789 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 6 ஆயிரத்து 563 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து கடந்த சில நாட்களாக 8 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் 650 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 66.08 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 65.99 அடியானது.

தொடர்ந்து நீர்வரத்து குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News