செய்திகள்
நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்

Published On 2021-02-20 11:36 GMT   |   Update On 2021-02-20 11:36 GMT
நாகப்பட்டினம் அருகே வருவாய்த்துறை அலுவலர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேதையன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

மாவட்டங்களில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News