ஆன்மிகம்
திருவிழாவையொட்டி உடல்களில் அலகு குத்தியபடி சென்ற பக்தர்கள்.

எல்லை காளியம்மன் கோவில் மாசித்திருவிழா: அலகு குத்தி, தீ மிதித்த பக்தர்கள்

Published On 2021-03-10 07:17 GMT   |   Update On 2021-03-10 07:17 GMT
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள எல்லை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற மாசித்திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்தும், அலகு குத்தியும் பரவசம் ஏற்படுத்தினர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காளிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், எல்லை காளியம்மன் கோவில், மலை காளியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களிலும் மாசித்திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாக்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாக்களின் ஒரு பகுதியாக எல்லை காளியம்மன் கோவிலுக்கு நேற்று காவிரி ஆறு சிந்தாமணி படித்துறையில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் அலகு குத்தியும் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.

சத்திரம் பஸ் நிலையம், மெயின்கார்டு கேட், பாலக்கரை, ஜங்ஷன் ெரயில் நிலையம் வழியாக அவர்கள் கோவிலை அடைந்தனர். அங்கு எல்லை காளியம்மன் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து வழிபட்டனர்.இதேபோல காளிகா பரமேஸ்வரி மற்றும் மலை காளியம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதன் காரணமாக எடமலைப்பட்டிபுதூர் மெயின் ரோடு மற்றும் இந்த கோவில்கள் அமைந்துள்ள இடங்கள் விழாக்கோலம் பூண்டு காட்சி அளித்தன.
Tags:    

Similar News