தொழில்நுட்பம்
நோக்கியா 9.3 பியூர்வியூ ரென்டர்

நோக்கியா 9.3 பியூர்வியூ மற்றும் நோக்கியா 7.3 வெளியீட்டு விவரங்கள்

Published On 2020-07-27 05:50 GMT   |   Update On 2020-07-27 05:50 GMT
நோக்கியா 9.3 பியூர்வியூ மற்றும் நோக்கியா 7.3 அறிமுக விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 மற்றும் நோக்கியா 6.3 ஆகும். மூன்று புதிய மாடல்களும் மூன்றாவது காலாண்டின் இறுதியிலோ அல்லது நான்காவது காலாண்டின் துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். 

முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த காலக்கெடுவில் தாமதம் ஆகும் பட்சத்தில் நான்காவது காலாண்டில் இவை அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கலாம்.



கொரோனாவைரஸ் பாதிப்பு நோக்கியா உற்பத்தி பணிகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்தே புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டது முதல் நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி நீண்ட காலம் ஆகிவிட்டது.  

நோக்கியா 9.3 பியூர்வியூ மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மொத்தமாக ஐந்து கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 7.3 மாடலை பொருத்தவரை செய்ஸ் ஆப்டிக்ஸ் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்றும் இவற்றின் பிரைமரி சென்சார் 48 அல்லது 64 எம்பி சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 6.3 மாடலில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், குவாட் கேமரா சென்சார்களின் பிரைமரி சென்சார் 24 எம்பி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News