செய்திகள்
விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி -மனமுடைந்து பேசிய விராட் கோலி

Published On 2021-08-28 12:53 GMT   |   Update On 2021-08-28 12:53 GMT
அணியில் எப்போதும் டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும், அப்போது தான் கீழே வருபவர்கள் நன்றாக ஆட முடியும் என விராட் கோலி கூறினார்.
லீட்ஸ்:

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த படுதோல்வி பற்றி கேப்டன் விராட் கோலி மனமுடைந்து பேசியுள்ளார். போட்டி முடிந்தவுடன் கேப்டன் கோலி கூறியதாவது:-

நாங்கள் முடிந்தவரை இந்த டெஸ்ட் போட்டியில் போராடினோம். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வர எங்களுக்கு சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தன. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எங்களின் பேட்டிங் சற்று சிறப்பாக இருந்த போதிலும், இங்கிலாந்தின் பவுலர்கள் அதிக அழுத்தம் கொடுத்தார்கள்.  அதை எங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது மிகவும் அதிர்ச்சிகரமானது. ஆனால் இங்கிலாந்தில் இப்படியாக சில நேரங்களில் நடக்கும். நாங்கள் பேட்டிங்கில் பல்வேறு தவறுகளை செய்தது, அவர்கள் நன்றாக பவுலிங் செய்தது ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்துள்ளது. 

இது ஒரு நல்ல பிட்ச். நன்றாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால் நாங்கள் அதைச் செய்ய தவறிவிட்டோம். பவுலிங்கிலும் நாங்கள் சரியாக செய்யபடவில்லை. 

கடந்த டெஸ்ட் போட்டி தோல்விக்குப் பின்னர் அவர்கள் நன்றாக மீண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான்.

 அணியில் எப்போதும் டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அப்போது தான் கீழே வருபவர்கள் நன்றாக ஆட முடியும். அதை செய்ய தவறுகிறோம். எங்கள் அணி கண்டிப்பாக மீண்டு வரும். எங்கள் திறனை நாங்கள் முதல் இரண்டு டெஸ்ட்களில் காட்டினோம். மீண்டும் அதைக் காட்டுவோம்.

 இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News