லைஃப்ஸ்டைல்
ஆனந்தம் தரும் குழந்தைகளின் தளர் நடை

ஆனந்தம் தரும் குழந்தைகளின் தளர் நடை

Published On 2020-06-19 03:26 GMT   |   Update On 2020-06-19 03:26 GMT
தளிர் நடையை சொந்தமாகக் கொண்ட குட்டீஸ்களே... துள்ளல் நடை கொண்ட சின்னஞ்சிறுவர்களே... நீங்கள் தளர்நடை பற்றி அறிவீர்களா? அது ஒன்றும் புதிரானதோ, புதிதானதோ அல்ல. நாம் இயல்பாக கவலைகள் மறந்து காலாற நடைபோடுவதே தளர்நடையாகும்.
தளிர் நடையை சொந்தமாகக் கொண்ட குட்டீஸ்களே... துள்ளல் நடை கொண்ட சின்னஞ்சிறுவர்களே... நீங்கள் தளர்நடை பற்றி அறிவீர்களா? அது ஒன்றும் புதிரானதோ, புதிதானதோ அல்ல. நாம் இயல்பாக கவலைகள் மறந்து காலாற நடைபோடுவதே தளர்நடையாகும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமா? உங்களில் எத்தனை பேர் பள்ளிக்கு நடந்து சென்று திரும்பி வருகிறீர்கள். நீங்கள் பள்ளிக்கு கிளம்பும்போதுகூட பரபரப்பு நடை போட்டிருக்கலாம், ஆனால் பள்ளிவிட்டதும் ஜாலியாக நண்பர்களுடன் பேசியபடி இயல்பாக நடந்து வீடு திரும்புவீர்களே, அதுதான் தளர் நடை. உங்களுக்குத் தெரியுமா? தளர் நடைக்கு என்று சர்வதேச அளவில் ஒரு நாள் அனுசரிக்கப்படுகிறது என்பது? ஆம், இன்றுதான் (ஜூன் 19) ‘சர்வதேச தளர் நடை தினம்’. இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், அதன் பயன் என்ன? என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

இன்றைய வாழ்க்கை எந்திர கதியாக ஓடியாடி இயங்கக் கூடியதாக மாறியிருக்கிறது. பலருக்கு வாழ்வே போராட்டம் என்ற நிலை உள்ளது. இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பள்ளி செல்லாத இளம் குட்டீஸ்களுக்கும் இது பொருந்தும். ஆமாம், உங்கள் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால், உங்களைக் கவனித்துக் கொள்ள தாத்தா பாட்டி இல்லாத நிலை இருந்தால், அவர்களின் வாழ்வு போராட்டமும், ஏக்கமும் நிறைந்ததுதானே...

நீங்கள் பள்ளி செல்லும் சிறுவர்களாக இருந்தால், காலையில் எழுந்தது முதல் பள்ளிக்கு பரபரப்பாக கிளம்புவது, வீட்டுப் பாடங்களை ஒழுங்காக முடித்துவிட்டோமா? என்பது தொடங்கி ஒவ்வொரு செயலிலும் அந்த பரபரப்பு எதிரொலிக்கும். சரியாக படிக்காத குழந்தைகள், ஆசிரியர்கள் சொல்லும் பாடங்கள் புரியாத குழந்தைகள் என்றால் இந்த பரபரப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு பள்ளி வகுப்புகளுடம்கூட கசப்பான அனுபவங்களாக இருக்கும். பள்ளி முடிந்தால் டியூசன் செல்ல வேண்டும், வீட்டுப் பாடங்கள் முடிக்க வேண்டும், அதற்குள் இரவு சாப்பாட்டு நேரமும், தூங்கும் நேரமும் வந்துவிடும். பின்னர் மறுபடியும் பொழுது விடிந்ததில் இருந்து மீண்டும் அதே பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

இப்படி, உங்கள் உலகில் நீங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தால், பெற்றோர் உலகம் வேறு மாதிரியானது. உங்களுக்குப் பள்ளி போல அவர்களுக்கு வேலை, அலுவலகம், தொழில் என பரபரப்பு சூழல். குழந்தைகளின் எதிர்காலம், தங்களின் ஆரோக்கியம், உடல்பராமரிப்பு பற்றிய கவலைகள் ஒருபுறம். இப்படி பெற்றோரும், குழந்தைகளுமாக இந்த உலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர முடியும். இந்த பரபரப்பை குறைக்கும் ஓய்வு தினம்தான், ‘சர்வதேச தளர் நடை தினம்’. இது நிச்சயம் நாமும் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கிய தினம் என்று கூறலாம்.

அமெரிக்காவில் தளர்நடை தினம் ஒரு விடுமுறை தினமாகும். வழக்கமான வார விடுமுறை போல அல்லாமல் வாழ்வின் அன்றாட பணிகள், பாரங்கள் அத்தனையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மனதில் கவலைகள், திட்டங்கள் எதையும் நினைவால் அசை போடாமல் ஓய்வெடுப்பது, மற்றும் தளர்வாக நடைபோட்டு மனதை லேசாக்கிக் கொள்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

மூச்சுவாங்க ஓடும் ஓட்டப் பயிற்சி உடலுக்கு நன்மை வழங்கும் என்றாலும், அதுபோன்ற பலனை மெல்லோட்டம் எனப்படும் ‘ஜாகிங்’ மூலமும் பெற முடியும். அதுபோலவே நடைப்பயிற்சி மூலம் உடல் பல நன்மைகளைப் பெறும் என்றாலும், பரபரப்பாக நடக்கும் நடையைவிட, இயல்பாக நடக்கும் தளர்நடை உடலையும், மனதையும் லேசாக்கி வெகு வான பலன்களைத் தருவதை பல்வேறு ஆராய்ச்சிகளும், இன்றைய மருத்துவ உலகமும் ஒப்புக் கொள்கிறது. அதன் அடிப்படையில் கவலைகள் மறந்து மகிழ்ச்சியாக, இயல்பாக நடைபோடுவதை பின்பற்றும் தினமே தளர்நடை தினமாகும். 
Tags:    

Similar News