செய்திகள்
புதுவையில் இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.

புதுவையில் போகி பண்டிகை கொண்டாட்டம்

Published On 2020-01-14 11:25 GMT   |   Update On 2020-01-14 11:25 GMT
போகி பண்டிகையான இன்று புதுவை நகரம் மற்றும் கிராமங்களில் வீடுகளில் தேங்கி இருந்த தேவையற்ற பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

புதுச்சேரி:

மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும். மறுநாள் பிறக்கும் தை திருநாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இதனையொட்டி போகி பண்டிகையான இன்று புதுவை நகரம் மற்றும் கிராமங்களில் வீடுகளில் தேங்கி இருந்த தேவையற்ற பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

புதுவையில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாசுக்கட்டுப்பாட்டு துறை சார்பில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக புதுவையில் இந்த ஆண்டு டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் அதிக அளவில் எரிக்கப்படவில்லை.

Tags:    

Similar News