செய்திகள்
சாத்துக்குடி

வரத்து குறைவால் சாத்துக்குடி விலை உயர்வு

Published On 2019-11-19 16:25 GMT   |   Update On 2019-11-19 16:25 GMT
கரூரில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பழங்கள் வரத்து குறைந்துள்ளதால் சாத்துக்குடி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரூர்:

கரூர் பழக்கடைகளுக்கு பழ வகைகள் வெளியூர் மார்க்கெட்டில் இருந்து வரத்து காணப்படுகிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் பழங்கள் வரத்து உள்ளது. இந்த நிலையில் சாத்துக்குடியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனையான சாத்துக்குடி தற்போது ரூ.130-க்கு விற்பனையாகிறது. சாத்துக்குடியை பழச்சாறு வகைக்கே பயன்படுத்தப்படும். இதனால் பழச்சாறு விலையும் அதிகரித்துள்ளது. சாத்துக்குடி பழச்சாறு ரூ.50-க்கு விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்தால் வழக்கமாக கடைகளில் பழச்சாறு குடிப்பவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

கரூர் மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு பழக்கடையில் விற்பனையான பழங்களில் சிலவற்றின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:- 

ஆப்பிள் ரூ.130-க்கும், நாட்டு மாதுளம் பழம் ரூ.120-க்கும், பன்னீர் திராட்சை ரூ.100-க்கும், ஆரஞ்சு ரூ.80-க்கும், அன்னாசி ரூ.50-க்கும், `கிவி' பழம் ரூ.130-க்கும், சீத்தா பழம் ரூ.90-க்கும் விற்பனையானது. பழங்களின் விலை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், 

சாத்துக்குடி ஆந்திராவில் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தற்போது சீசன் இல்லாததால் அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை உயர்ந்துள்ளது. தற்போது `கிவி' பழம் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. `கிவி' பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் அதனை தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். 

இதேபோல சீத்தா பழம் வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையான சீத்தா பழம் ரூ.90-க்கு விற்பனையாகுகிறது'' என்றார்.
Tags:    

Similar News