ஆன்மிகம்
சிறுபாக்கம் அருகே ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

சிறுபாக்கம் அருகே ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-10 03:17 GMT   |   Update On 2021-02-10 03:17 GMT
சிறுபாக்கம் அருகே பொயனப்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிறுபாக்கம் அருகே பொயனப்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக பூஜை நடந்தது. பின்னர் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு சென்று கலைச்செல்வன் எம்.எல்.ஏ., கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன், கடலுர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில், ஆண்டவர் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள தூண்டிக்காரன், செல்லியம்மன், முனியப்பர், கருப்புசாமி மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கோகுல் மக்கள் கட்சி தலைவர் சேகர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தேவராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சின்னசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கந்தசாமி, இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பொயனப்பாடி முன்னாள் கவுன்சிலர் சம்பத்குமார் ஏற்பாடு செய்தார்.
Tags:    

Similar News