செய்திகள்
கைது

நாகர்கோவிலில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

Published On 2019-10-11 09:29 GMT   |   Update On 2019-10-11 09:29 GMT
நாகர்கோவிலில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் பள்ளிகள், கல்லூரிகள், ஆலயங்கள் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நேசமணிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது சம்சீர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் ராமன்புதூர் சந்திப்பில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 80 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ரத்தின சுயம்பு (வயது 50) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் கார்மல் பள்ளி அருகே உள்ள கடைகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அங்குள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டு பிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த 80 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த மத்தியாஸ் (63) என்பவரை கைது செய்தனர்.

மாவட்டம் முழுவதும் இதே போல் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News