செய்திகள்
கோப்புப்படம்

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி கணிப்பு

Published On 2021-06-08 19:07 GMT   |   Update On 2021-06-08 19:07 GMT
இந்தியா, 2022-2023 நிதியாண்டில் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியும், 2023-2024 நிதியாண்டில் 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியும் எட்டும் என்று உலக வங்கி கூறியுள்ளது
வாஷிங்டன்:

உலகளாவிய பொருளாதார நிலை குறித்த தனது கணிப்புகளை உலக வங்கி நேற்று வெளியிட்டது. அதில், இந்தியா குறித்து உலக வங்கி கூறியிருப்பதாவது:-

கடந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில் இந்திய பொருளாதாரம் மீண்டு எழுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. ஆனால், கொரோனா இரண்டாவது அலை, இந்தியா மீண்டு வருவதை பாதித்துள்ளது. உலக அளவில் இந்தியாவில்தான் கொரோனா இரண்டாவது அலை மோசமாக உள்ளது.

இருப்பினும், நடப்பு நிதியாண்டுக்கான (2021-2022) இந்திய பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.3 சதவீத வளர்ச்சியை பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

இ்ந்தியா, 2022-2023 நிதியாண்டில் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியும், 2023-2024 நிதியாண்டில் 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியும் எட்டும் என்று நினைக்கிறோம்.

அதுபோல், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News