செய்திகள்
கொரோனா வைரஸ்

மண்டபம், புதுமடத்தில் கொரோனா தகவல் மையம் திறப்பு

Published On 2021-06-08 10:20 GMT   |   Update On 2021-06-08 10:20 GMT
மண்டபத்தில் நடந்த கொரோனா பேரிடர் தகவல் மையம் திறப்பு விழாவிற்கு நகர் தலைவர் யாசர் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவர் பாக்கியநாதன் உதவி மையத்தை திறந்து வைத்தார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கொரோனா பேரிடர் மையம் சார்பில் மாவட்டம் முழுவதும் ‘கொரோனா’ விழிப்புணர்வு பிரசாரங்கள், தடுப்பு மருந்துகள் விநியோகம், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கொரோனா பேரிடர் தகவல் மையம் திறப்பு விழா புதுமடத்தில் நகர் தலைவர் முகம்மது உசேன் தலைமையில் நடந்தது. மருத்துவர் ரவிவர்மா உதவி மையத்தை திறந்து வைத்தார்.மாவட்ட தலைவர் மன்சூர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக வட்டார செயலாளர் நசீர், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், வடக்கு தெரு ஜமாத் தலைவர் அப்துல் காதர், ராமநாதபுரம் கிழக்கு சட்டமன்ற தொகுதி வர்த்தக அணி தலைவர் ஜாபர் கான் கலந்து கொண்டனர்.

மண்டபத்தில் நடந்த கொரோனா பேரிடர் தகவல் மையம் திறப்பு விழாவிற்கு நகர் தலைவர் யாசர் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவர் பாக்கியநாதன் உதவி மையத்தை திறந்து வைத்தார்.

வட்டார தலைவர் பசீர் அலி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட செயலாளர் சேக்தாவூத், அரசு மருத்துவ மனை சுகாதார அதிகாரி ராமச்சந்திரன், ஹைவே பெட்ரோல் எஸ்.எஸ்.ஐ. மாதவன் கலந்து கொண்டனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர் தலைவர் சுலைமான், செயலாளர் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தகவல் மையத்தில் கபசுரக்குடிநீர், பல்ஸ் ஆக்சி மீட்டர் பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனை, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தல் மற்றும் கொரனோ தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News