செய்திகள்
சாக்‌ஷி மாலிக்

காமன்வெல்த் போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதலை நீக்கியது நியாயமற்றது - சாக்‌ஷிமாலிக்

Published On 2019-07-31 04:08 GMT   |   Update On 2019-07-31 04:08 GMT
காமன்வெல்த் போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதலை நீக்கியது நியாயமற்றது என்று மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷிமாலிக் தெரிவித்துள்ளார்.
நொய்டா:

இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம் காமன்வெல்த் போட்டியை புறக்கணிப்போம் என்று எச்சரித்துள்ளது.

இது குறித்து ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கருத்து தெரிவிக்கையில், ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை நீக்கி இருப்பது நியாயமற்றது. அதற்காக போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது சரியானதாக இருக்காது. காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் சேர்க்கப்படும் என்று நம்புகிறேன். எந்தவொரு பந்தயம் போட்டியில் இருந்து நீக்கப்பட்டாலும் அந்த போட்டிக்கான வீரர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஒட்டுமொத்த இந்திய அணியில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் கூட அது நியாயமற்றது தான். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்’ என்றார்.
Tags:    

Similar News