செய்திகள்
எஸ்ஏ சந்திரசேகர்

தயாரிப்பாளர் சங்க தேர்தல், கட்சி பணியை கைவிட்ட எஸ்ஏசி, ஆந்திராவுக்கு பஸ் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Published On 2020-11-22 08:00 GMT   |   Update On 2020-11-22 08:00 GMT
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல், கட்சி பணியை தற்காலிகமாக கைவிட்ட எஸ்ஏசி, ஆந்திராவுக்கு பஸ் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

# மத்திய உணவு பதப்படுத்துதல் துறை சார்பில் ரூ.320 கோடி செலவில் தமிழகம், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் 28 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

# இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90.95 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 85.21  லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.40 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.69 சதவீதமாகவும் உள்ளது.

# டெல்லியில் முதல் முறையாக ரேபிட் டெஸ்ட் எனப்படும் அதிவிரைவு சோதனை எண்ணிக்கையை விட பிசிஆர் பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

# தமிழகம்- ஆந்திரா இடையே பஸ் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வருகிற 25-ந்தேதி முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே பயணிக்க ‘இ-பாஸ்’ தேவை இல்லை என்று தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

# வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, மாமல்லபுரம்- காரைக்கால் இடையே வரும் 25ம் தேதி கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

# மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பாஜக 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டதாகவும், அதற்கு 25 தொகுதிகள் ஒதுக்க அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

# தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும் என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

# உலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில்  உலகின் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

# சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு டி.ஆர் அணி மற்றும் தேனாண்டாள் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

# விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் எழுதி உள்ளார். தனது பெயரை பயன்படுத்த விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால், எஸ்.ஏ.சி கட்சி பணியை தற்காலிகமாக கைவிட்டதாக கூறப்படுகிறது. 
Tags:    

Similar News