செய்திகள்
உட்டம் குமார் (3-வது இருப்பவர்)

தேர்தல் தோல்வி எதிரொலி - தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

Published On 2020-12-04 16:24 GMT   |   Update On 2020-12-04 16:24 GMT
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் தற்போதுவரை காங்கிரஸ் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
ஐதராபாத்:


தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்  இ  இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

வாக்குச்சீட்டு முறைபடி நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. பெரும்பாலான வார்டுகளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அதிக இடங்களை கைப்பற்றுள்ளது

150 வார்டுகளில் 146 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகள் அடிப்படையில்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 56 வார்டுகளில் வெற்றி

பாஜக - 46 வார்டுகளில் வெற்றி

அனைத்திந்திய மஜ்லிஸ்  இ  இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) - 42 வார்டுகளில் வெற்றி

காங்கிரஸ் - 2 வார்டுகளில் வெற்றி

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என தெரியவந்துள்ளது. மேலும், 4 வார்டுகளுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. அந்த வார்டுகளில் வாக்கு எண்ணும்
பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், இந்த மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் என். உட்டம் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News