செய்திகள்
கர்ப்பிணி

கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தை கவனிக்க சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்

Published On 2020-03-26 08:33 GMT   |   Update On 2020-03-26 08:33 GMT
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தை கவனிக்க சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி ஆஸ்பத்திரிகளுக்கு பரிசோதனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் தடைபடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் எவ்வளவு கர்ப்பிணிப்பெண்கள் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டு மாதத்திற்கு அதாவது மே 31 வரை எத்தனை கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர் என்று கணக்கு எடுத்ததில் சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதில் 11 ஆயிரம் பெண்கள் மேலும் பல நோயுடன் உள்ளதால் அவர்களை சிறப்பாக கவனிக்க தேவையான ஏற்பாடுகளை இப்போதே செய்துள்ளோம்.

மே 31 வரை எந்தெந்த கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு தயாராக இருக்கிறார்களோ அவர்களைக் கண்டறிந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சுகப்பிரசவம் நடைபெற அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.

இதற்காக சுகாதாரப் பணியாளர்கள் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண்களை வாகனத்தில் அழைத்துச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து சுகப்பிரசவம் நடைபெறும் வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகளும் வீடு தேடி சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News