தொழில்நுட்பம்
சியோமி சார்ஜ் டர்போ

சீன தளத்தில் சான்று பெற்ற சியோமி 120 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம்

Published On 2020-07-04 07:23 GMT   |   Update On 2020-07-04 07:23 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய 120 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம் சீன தளத்தில் சான்று பெற்று இருக்கிறது.


சியோமி நிறுவனத்தின் 120 வாட் சார்ஜர் 3சி சான்று பெற்று இருக்கிறது. புதிய சார்ஜர் MDY-12-ED எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த சார்ஜர் 5V-3A,11V-6A மற்றும் 20V-6A வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சார்ஜரை ஹன்ட்கீ வடிவமைத்து இருக்கிறது.

முன்னதாக 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. விவோ நிறுவனமும் 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது.

இந்த தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை ஐந்தே நிமிடங்களில் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 13 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. 

முன்னதாக சியோமி சார்ஜர் பற்றிய வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இதில் ஒற்றை யுஎஸ்பி டைப் ஏ சார்ஜிங் போர்ட், யுஎஸ்பி டைப்-சி பிடி ஃபாஸ்ட் சார்ஜர்களை கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பம் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என தெரிகிறது. 
Tags:    

Similar News