வழிபாடு
கனி காணும் நிகழ்ச்சியையொட்டி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்த காட்சி.

சுசீந்திரம் கோவிலில் இன்று கனி காணும் நிகழ்ச்சி: வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-04-15 05:45 GMT   |   Update On 2022-04-15 05:45 GMT
கேரள முறைப்படி சித்திரை விஷூ நிகழ்ச்சி இன்று நடந்தது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் கேரள முறைப்படி கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. கேரள முறைப்படி சித்திரை விஷூ நிகழ்ச்சி இன்று நடந்தது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் கேரள முறைப்படி கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவிலில் பல்வேறு விதமான காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. தாணுமாலய சுவாமி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. தாணுமாலய சுவாமிக்கு தங்க குடத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தங்கம், வெள்ளி நகைகள் அடுக்கி வைக்கப்பட்டது.

சாமி தரிசனத்திற்கு அதிகாலையிலேயே பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காய், கனிகள், கைநீட்டமும் வழங்கப்பட்டது. வெளிநாட்டையைச் சேர்ந்த பக்தர்களும் இன்று கோவிலில் தரிசனம் செய்தனர்.

அப்போது அவர்கள் காய், கனிகள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து வியப்பு அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் கண்காணிப்பாளர் சிவக்குமார், ஆய்வர் ராமலெட்சுமி, கோவில் மேலாளர் ஆறுமுக தரன், கணக்கர் கண்ணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News